- முதன்மைக் கட்டுரை: ஆஸ்திரேலிய வரலாறு
| ஆஸ்திரேலியா Commonwealth of Australia |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Advance Australia Fair1 |
||||||
| தலைநகரம் | கன்பரா 35°18′S 149°08′E / -35.3, 149.133 |
|||||
| பெரிய நகரம் | சிட்னி | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம்2 | |||||
| மக்கள் | ஆஸ்திரேலியன் | |||||
| அரசு | மக்களாட்சி (அரசியலமைப்பு முடியாட்சி) |
|||||
| - | முடியாட்சி | எலிசபெத் II | ||||
| - | ஆளுநர் | மைக்கல் ஜெஃப்ரி | ||||
| - | பிரதமர் | கெவின் ரட் | ||||
| விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
| - | அரசியலமைப்பு | ஜனவரி 1, 1901 | ||||
| - | வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் | டிசம்பர் 11, 1931 (செப் 9, 1939 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது) | ||||
| - | ஆஸ்திரேலிய சட்டம் | மார்ச் 3, 1986 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 7,741,220 கிமீ² (6வது) 2,988,888 சது. மை |
||||
| - | நீர் (%) | 1 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 estimate | 21,134,563 [1] (53வது) | ||||
| - | 2006 census | 19,855,288 | ||||
| - | அடர்த்தி | 2.6/km² (224வது) 6.7/sq mi |
||||
| மொ.தே.உ (கொ.ச.வே) | 2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | US$718.4 பில்லியன் (17வது) | ||||
| - | தலா/ஆள்வீதம் | US$34,359 (14வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2007 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | US$822.1 பில்லியன் (15வது) | ||||
| - | தலா/ஆள்வீதம் | US$39,320 (17வது) | ||||
| ம.வ.சு (2004) | 0.957 (உயர்) (3வது) | |||||
| நாணயம் | டொலர் (AUD) |
|||||
| நேர வலயம் | ஆஸ்திரேலிய நேரம் (ஒ.ச.நே.+8 to +10.53) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | ஆஸ்திரேலிய நேரம் (UTC+9 to +11.53) | ||||
| இணைய குறி | .au | |||||
| தொலைபேசி | +61 | |||||
| 1அரசியின் குடும்பத்தினரின் வருகையின் போது முடியாட்சி கீதம் ("அரசியை கடவுள் காக்க") பாடப்படுகிறது([3]) 2ஆங்கிலத்துக்கு சட்ட அடிப்படையில் ("டெ ஜூரி", de jure) உரிமைநிலை ஏதும் இல்லை ([4]) 3மூன்று நேர வலயங்களுக்கும் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. பார்க்க: ஆஸ்திரேலிய நேர வலயம் |
||||||
ஆஸ்திரேலியா அல்லது அவுஸ்திரேலியா (Australia) என்பது ஆஸ்திரேலிய கண்டம், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளை உள்ளடக்கிய ஒரு நாடு. பொதுநலவாய ஆஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன.
கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது[2]. அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர்[3], 1770 இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக ஜனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆஸ்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. ஜனவரி 1, 1901 இல் ஆறு தனித்த்னையான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆஸ்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும்.
பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 21.3 மில்லியன்கள் (2.13 கோடி, 2008 மதிப்பீட்டின் படி[4]) மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆஸ்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு.
பொருளடக்கம் |
ஆஸ்திரேலியா என்ற பெயர் Australis என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. தெற்கே என்பது இதன் கருத்து. 1521 இல் ஸ்பானியர் முதன் முதலாக பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்தனர். ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆஸ்திரேலியா என்ற சொல் 1625 இல் பாவிக்கப்பட்டது.[5]. ஜகார்த்தாவில் நிலை கொண்டிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் 1638 இல் தெற்கே தாம் புதிதாகக் கண்டுபிடித்த இடத்திற்கு Australische என்ற பெயரை இட்டனர்.
ஆஸ்திரேலியாவை முதன் முதலில் சுற்றி வந்த மத்தியூ பிலிண்டேர்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி 1814 இல் தனது A Voyage to Terra Australis என்ற நூலில் "ஆஸ்திரேலியா" என்ற பெயரைப் பயன்படுத்தியதில் இருந்து இப்பெயர் பரவலாக அடிபட்டது. நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி 1817, டிசம்பர் 12 இல் இப்பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்[6]. 1824 இல் இப்பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் "ஆஸ்திரேலியா" əˈstɹæɪljə, -liːə, -jə என்றவாறு பலுக்கப்படுகிறது[7].
ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[8]. இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்ஸ்லாந்தின் தூர-வடக்கிலும், டொரெஸ் நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை.
ஆஸ்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமியான வில்லெம் ஜான்சூன் என்பவர். இவர் கேப் யோர்க் தீபகற்பத்தின் கரையை 1606 இல் கண்டார். 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு "புதிய ஒல்லாந்து" எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 1770 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது பசிபிக் பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் கிழக்குக் கரையில் தரையிறங்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு பெரிய பிரித்தானியாவுக்காக அதனை உரிமை கோரினான். இவனது கண்டுபிடிப்புகள் பின்னர் அங்கு பிரித்தானியாவின் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிக்க ஏதுவாக இருந்தது.
1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.
அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும்.
மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை மத்திய அரசாங்கம் (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே மத்திய அரசாங்கம் மாற்ற முடியும். மருத்துவசாலைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (local government) போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.
அவுஸ்திரேலியா இந்தோ அவுஸ்திரேலிய புவித்தட்டில் இந்திய, பசுபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டு அமைந்துள்ளது. 7,617,930 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய இந்நாட்டின் பெரும்பகுதி பாலைநிலங்களாகும்.
அவுஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும். பழையதும் வளங்குறைந்ததுமான மண்ணைக் கொண்ட இது மனிதர் வாழும் கண்டங்களில் மிக வரண்டதுமாகும். பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையையண்டியே வாழ்கிறார்கள்.
உலகின் மிகப் பெரும் பவளப் பாறைத் தொடர் அவுஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையை அண்டிக் காணப்படுகிறது. இது 2000 கிலோமீற்றர்களை விட நீளமானது.
இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும். கங்காரு, கோவாலா, வால்லரு ஆகியன சில அவுஸ்திரேலிய உயிரினங்கள்.
| பா • உ • தொ உலகின் கண்டங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Why are we here?
All text is available under the terms of the GNU Free Documentation License
This page is cache of Wikipedia. History